Nov 8, 2011

பெங்களூரு நீதிமன்றத்தில் நவ.22ல் ஜெயலலிதா ஆஜராவார்: வழக்குரைஞர் குமார்,


சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மாதம் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில், கேள்விகள் முடியாததால், அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில்
ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர். ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததுடன், வசதியான ஒரு நாளில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி, இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் குமார், வரும் நவம்பர் 22ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவார் என்று கூறினார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை.
வரும் நவ.22ம் தேதி ஆஜராகும் ஜெயலலிதாவிடம் கேள்விகள் மேலும் கேட்க வேண்டியிருந்தால், அவர் மீண்டும் நவ.23ம் தேதியும் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments: