Nov 25, 2011

சென்னை: கனமழை பெய்ததால் ஓடுபாதையில் மழைநீர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன


சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கியதால், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலைய பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் ஓடுபாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி விட்டது. 
இதன் காரணமாக, மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், டெல்லியில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், பெங்களூரில்
இருந்து சென்னை வந்த விமானம், மதுரையில் இருந்து சென்னை வந்த விமானம் என 5 உள்நாட்டு விமானங்கள் தரை இறங்க முடியவில்லை.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த டைகர் ஏர்லைன்ஸ், கோலாலம்பூரில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும் தரையிறங்க முடியவில்லை. இதனால் 7 விமானங்களும் விமான நிலையத்தை சுற்றி, சுற்றி பறந்து வந்தன. இதற்கிடையில், ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீரை வேகமாக வெளியேற்றினர். இதையடுத்து, விமானங்கள் தரையிறங்கின. மழை காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

No comments: