Dec 26, 2011

மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 1000 பேர் கைது!



முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டிப்பதாக கூறி சென்னையில் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன்  சிங்குக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.  சைதாப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட முயன்றபோது அனைவரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் இன்று காலை கருப்புக்கொடி காட்டும்  போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர்.காலை 8.45 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பனகல் மாளிகை அருகே வந்தார். அவருடன் இளைஞர் அணி செயலா ளர் எல்.கே.சுதீஷ், எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உள்பட கட்சி நிர்வாகிகள் வந்தனர். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான  தொண்டர்கள் திரண்டிருந்தனர். கருப்புக்கொடியுடன் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண் டும். முல்லை பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். கூடங்குளம் பிரச்னையில் சுமுக முடிவு எடுக்க வேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினர்.

விஜயகாந்த் தலைமையில் தொண்டர்கள் அனைவரும் கையில் கருப்புக்கொடியுடன் கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட் டனர். ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர். தடையை மீறி எல்லாரும் பேரணியாக சென்றனர். மறை மலை அடிகள் பாலத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறியதாக விஜயகாந்த் உள்பட அனைவரையும் கைது செய்தனர். 

அவர்களை பஸ் மற்றும் போலீஸ் வேன்களில் ஏற்றி, சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி சமூகநல கூடம், சைத £ப்பேட்டை எஸ்பிஎஸ் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் வைத்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநகராட்சி சமூக நல கூடத்தில் வைக்கப்பட்டுள்ளார். கருப்புக்கொடி போராட்டத்தால் அண்ணா சாலையில் 3 மணி நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

No comments: