Dec 6, 2011

கார்களுக்கும் இனி ஸ்டார் ரேட்டிங்:இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ)


கார்களுக்கும் இனி ஸ்டார் ரேட்டிங்:இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ)
பிரிட்ஜ், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃபேன்களுக்கு மின் சிக்கன குறியீடாக இருக்கும் 5 ஸ்டார் ரேட்டிங் முறையை கார்களுக்கும் அமல்படுத்த இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ) திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார் அதிக மைலேஜ் தருவதாக இருக்கும். மின்சார சிக்கனம் கருதி பிரிட்ஜ், ஏசி உட்பட பல பொருட்களுக்கு ஸ்டார் ரேட்டிங் பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

‘அதிக ஸ்டார்கள்... அதிக பணம் சேமிப்பு’ என்ற வாசகத்துடன் இந்த குறியீடுகளை பி.இ.இ. மின்சாதனங்களில் பொறித்து வருகிறது. எனவே, வீட்டில் மின்சிக்கனம் கருதி நுகர்வோரும் ஸ்டார்கள் எண்ணிக்கையை பார்த்து பொருட்களை வாங்கத் தொடங்கி விட்டனர். பி.இ.இ. ஏஜென்சியின் இந்த திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


மின்சார சிக்கனம் போலவே வாகனங்களில் எரிபொருள் சிக்கனமும் அவசியம் என பி.இ.இ. கருதுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டது. அது தினமும் உயர்ந்து வருகிறது. எனவே, எரிபொருளான பெட்ரோல், டீசல்,  சிலிண்டர் ஆகியவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதேநேரம், அவற்றின் பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் சீர்கேடும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கார் மாடல்களை 100 கி.மீ.க்கு எத்தனை லிட்டர் தேவை என்பதன் அடிப்படையில் 1 முதல் 5 ஸ்டார் ரேட்டிங் அளித்து தரம் பிரிக்க பி.இ.இ. திட்டமிட்டுள்ளது. அதன்படி 100 கி.மீ.க்கு 7 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் தேவைப்படும் கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும். 9 லிட்டர் வரை தேவைப்படும் கார்கள் 4 ஸ்டார், 11 லிட்டர் செலவாகும் கார்கள் 3 ஸ்டார் பிரிவுகளில் இடம்பெறும். 100 கி.மீ. தூரத்தை கடக்க 12 லிட்டர் எரிபொருள் தேவைப்படும் கார்கள் மற்றும் அதற்கு மேலும் எரிபொருள் தீர்க்கும் கார்கள் 1 ஸ்டார் பிரிவில் இருக்கும்.

நம் நாட்டில் இப்போது 330 கார் மாடல்கள் உள்ளன. அவற்றில் 32 மாடல்கள் மட்டுமே 5 ஸ்டார் ரேட்டிங்கில் இடம்பெறுகின்றன. இது மொத்த கார்கள் எண்ணிக்கை 9 முதல் 16 சதவீதம் மட்டுமே. மற்ற கார்கள் அனைத்தும் எரிபொருளை வீணடித்து பண விரயமும், சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுத்துவதாக பி.இ.இ. தெரிவிக்கிறது.

No comments: