Dec 4, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடுகிறது:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய முழு விவரத்தை

இந்திய அரசு இந்த கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுகிறதோ இல்லையோ, அசாஞ்சே அந்த பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களை பற்றிய முழு விவரத்தை பெற்று வெளியிடுவதில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், அந்தந்த நாட்டு அரசுகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றிய தங்களது விமர்சனங்களுடன் கூடிய கருத்துக்களை தங்கள் நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்ததை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலப்படுத்தி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்சே.அதே அசாஞ்சேதான் தற்போது இந்திய கறுப்பு பண முதலைகளின் பெயர்களை வெளியிடப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது வெளியிடப்படலாம் என்றார்..இது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ அனுப்பிய இமெயிலிருந்து சீன உளவுத் துறை திரட்டிய தகவலின் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக கூறிய அவர், மேற்குலக நாடுகள் இந்திய தொலைபேசிகளையும், இமெயில்களையும் இடைமறித்து தெரிந்துகொள்வதாகவும், இந்தியா பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

No comments: