Dec 24, 2011

"அதில் " வித்யா பாலனை மிஞ்சுவேன் மாடல் அழகி சுரபி பிரபு சவால்!

மாடல் அழகியும், நடிகையுமான சுரபி பிரபு. பிரபல மாடல் அழகியும், ‘இலா அய்தே இலா’ என்ற தெலுங்கு பட ஹீரோயினுமான சுரபி பிரபு கூறியதாவது:நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. பட்டப்படிப்பு முடித்தவுடன் மாடல் அழகியானேன். பின்னர் மேடை நாடகங்களில் நடித்தேன். நடிகையாக வேண்டும் என்ற கனவு பலித்தது. மும்பை நடிகைகளுக்கு அதிகம் கைகொடுத்திருப்பது தென்னிந்திய படங்கள்தான். என்னுடைய அறிமுகமும் தென்னிந்திய படங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘இல அய்தே இலா’ படத்துக்காக டைரக்டர் பி.சந்திரசேகர் ரெட்டி ஹீரோயின் தேடுவதாக அறிந்தேன். அவரை தொடர்பு கொண்டேன். நான் அதிர்ஷ்டக்காரி. எனக்கு உடனே வாய்ப்பு கிடைத்தது. நல்ல கேரக்டர். ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தது. அதுபற்றி கவலைப்படாமல் நடித்தேன்.  ‘தி டர்டி பிக்சர்’ படத்தில் வித்யாபாலன் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து ஒரே படத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். அவரைவிட என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். நடிப்பும், கவர்ச்சியும் இருந்தால் எந்த  நடிகையும் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும். நானும் அதற்கு முயற்சிப்பேன்.

எனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொரு அதிகாரி !



நில அளவைப் பணிக்காக 'தியோடலைட்’ என்ற அளவியல் கருவி, இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. அதைப் பயன்படுத்த, தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். நில அளவை துவங்க மலை உச்சிகளின் மீது ஏற வேண்டி இருந்தது. அதில், அளவைப் பணியாளர்கள் பலர் காயமுற்றனர். பணியின்போது ஒரு முறை தியோடலைட் கருவி நழுவி விழுந்து சேதம் அடைந்தது. இந்தியாவை அளப்பது என்பது அவர்கள் நினைத்தது போல எளிதாக இல்லை.வில்லியம் லாம்டன், ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், புவியியல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணித அறிஞரும்கூட. ஆகவே,

டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர்கள் கொதிப்பு !


டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர். 

மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )


மார்பகங்களை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரஞ்சுப் பெண்களால் மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கன் உள்ளீடுகளில் குறை காணப்படுவதால், அவற்றை அவர்கள் அனைவரும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதற்கான அறுவைச் சிகிச்சைகளை செய்வதற்கான பணத்தை தமது பொதுச் சுகாதார நிதியில் இருந்து வழங்குவோம் என்று கூறியுள்ள பிரஞ்சு அரசாங்கம், இப்படியான உள்ளீடுகளை மார்பகங்களில் பொருத்திய பெண்கள் அனைவரும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறது

Dec 23, 2011

நியூசிலாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் (படங்கள்)

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டன. தூங்கி கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். பின்னர் 70 நிமிடங்கள் கழித்து அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களிலேயே இருந்தனர். நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலில் இருந்த ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல பகுதிகளில் தொலைதொடர்பு, மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 181 பேர் பலியாயினர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. அங்கு ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் முறை நில அதிர்வுகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 22, 2011

அஜீத்தின் பில்லா-2 ஜனவரியில் ரிலீஸ்?


அஜீத் நடித்த பில்லா படம் கடந்த 2007-ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஜோடியாக நடித்தனர். விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் ரஜினி நடிப்பில் வந்த பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை “பில்லா 2” என்ற பெயரில் படமாக்க அஜீத் விரும்பினார். அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார். இந்நிலையில் இப்படத்தில் ‌ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 25நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியில் அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களை ஆட்டி வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். ஏற்கனவே வந்த அஜித்தின் பில்லா-வை காட்டிலும், இப்படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் இயக்குநர். இதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, பார்த்து எடுத்து வருகிறாராம் சக்ரி டோல்டி.

இவர் கமலஹாசன் நடித்த ' உன்னைப்போல் ஒருவன்' என்ற படத்தை டைரக்டு செய்தவர். தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறு விறுப்பாக நடந்தது.

கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரெய்லர்கள் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக உள்ளது.


மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது

 "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மதுரை சு.வெங்கடேசன் எழுதிய, "காவல் கோட்டம்' என்ற நாவலுக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வெங்கடேசன் குறிப்பிடுகையில், "மதுரையில் 1920ம் ஆண்டு வரை இருந்த பாதுகாப்பு முறையை அடிப்படையாக வைத்து, இந்த நாவலை எழுதினேன். பொதுவாக இந்த விருது, வயதான எழுத்தாளர்களுக்குத் தான் வழங்கப்படுவது வழக்கம். இளம் வயதில் இந்த விருதைப் பெறும் எழுத்தாளன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், தாமிர பட்டயமும், சால்வையும் அடங்கியது.

Dec 21, 2011

தமிழக போலீஸ் பொதுமக்கள்மீது தடியடி கண்ணீர் புகை குண்டுவீச்சு பதட்டம்


கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். லோயர் கேம்ப்பில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதட்டம் நிலவுகிறது. சுருளிப்பட்டி, கருணாக்கமுத்தன்பட்டி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். 

கூடலூரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுப்பையும் மீறி லோயர் கேம்ப் பகுதியில் பேரணியாக விவசாயிகள் சென்றனர். தென்மண்டல ஐஜி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி செல்லக்கூடாது என்று விவசாயிகளிடம் சொன்னார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்தது. இதனையடுத்து போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடந்தது. காவல்துறை தடியடியால் விவசாயிகள் சிதறி ஓடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கண்ணீர் புகை குன்ன்டு வீசியதால் பெரும் பரபரப்பு .

               காலையில் மறியல் செய்த வைகோ கைது செய்யப்பட்டது குறிபிடத்தக்கது 

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்.(எவரெஸ்ட் என்பது மலை இல்லை! )



இந்திய வரைபடத்தைப் பார்க்கும்போது எனக்குள் நிறைய கேள்விகள் உருவா​கின்றன, இந்திய வரைபடம் எப்படி, யாரால் வரையப்பட்டது? எவ்வாறு நதிகளையும் நிலத்தையும் வேறுபடுத்திப் பிரித்தார்கள்? யார் முதன்முதலாக இந்திய வரைபடத்தை அச்சிட்டது? இன்று உள்ள இந்திய வரைபடமும் அசோகர் கால இந்திய வரைபடமும் ஏன் வேறு​பட்டு இருக்கின்றன? இப்படிக் கேள்விகள் கிளைவிட்டுக்கொண்டே இருக்கின்றனஇதற்கான பதிலின் பின்னே பல நூற்றாண்டு கால உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. ஆகவே, இந்தப் பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக இன்னொரு துணைக் கேள்வி இருக்கிறது.சென்னையில் உள்ள பரங்கிமலைக்கும் வடக்கில் உள்ள இமயமலைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?இரண்டும் வெவ்வேறு உயரமான மலைகள் என் பதைத் தவிர, வேறு என்ன இருக்கப்போகிறது என்றுதான் பொதுப்புத்தி யோசிக்கிறது. ஆனால் அப்படி இல்லை. தொடர்பு இல்லாத இந்த இரண்டு புள்ளிகளும் ஒரே கண்ணியால் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஒன்றிணைக்கும் புள்ளியாக இருந்தது, இந்தியாவில் நடைபெற்ற நில அளவைத் திட்டம். இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அரசியலும் விஞ்ஞானமும் ஒன்று கலந்திருக்கின்றன. இன்று நாம் காணும் வரைபடம் இந்தியா கடந்து வந்த வரலாற்றுப் பாதையின் ஓர் அடையாளம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

(முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V க்கு கண்டன கடிதம் , நான் ஈமெயில் அனுப்பியது  உங்கள் பார்வைக்காக )

வணக்கம் நான் கோவிந்தராஜ் மதுரை , நேற்று (21/12/2011) செய்தியில் கேரளாவில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளீர்கள் உங்கள் விளம்பரம் "சிலர் இந்தப்பக்கம் சிலர் அப்படியே அந்தபக்கம் " ஆனால் நீங்கள் கேரளா பக்கமா ? தமிழர்களை கேரளவினர் தாக்கவில்லையா ? என்ன நடுநிலையோ ! கேரளாவில் கலக்டரிடம் பேட்டி,  ஆனால் தமிழகத்தில் எந்த அதிகாரியிடம் பேட்டி வாங்கினீர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாத செய்திகள் 

கேரளத்தினர் வெறி: இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. அணையில் 136 அடி உயரத்துக்கு நீரை தேக்குவது பாதுகாப்பானது அல்ல. எனவே அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். அணை பலப்படுத்தப்பட்டு இருப்பது அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது ஏற்கக்கூடியது அல்ல.


116 ஆண்டு கால அந்த அணை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அதற்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவில் பேரழிவு ஏற்படும். 5 மாவட்டங்களில் உள்ள 14 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, மனப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.


கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.


எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கும்,  மலையாள நிறுவனங்களுக்கும் தமிழக போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது.    ஆனால்,  கேரளாவில் மலையாள போலீசார் வெறிபிடித்து தமிழர்களை தாக்குகிறார்கள்.

 மு  ல்லை பெரியாறு பிரச்சணை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பகதர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். 


அதன் பிறகு தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் மீது முற்றுகை , தாக்குதல் தொடுத்தனர்.


தோடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதால் கேரளாவுக்கு செல்லும் பால், காய்கறிகளை செல்லவிடாமல் தமிழர்கள் தடுத்து வந்தனர். 

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக தோட்ட தொழிலாளிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. 


ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக எல்லையில் உள்ள பல்வேறுகோயில்களில் மாலை கழட்டி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்ததால் கேரள அரசுக்குவருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனால் தமிழக பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கேரள அரசு உதவி செய்யும் என்று சொன்னதால் தமிழக பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு செல்ல தொடங்கினார்கள்.


 சிவகங்கை மாவட்டம் பரமக்குடி ஹரி , கார்த்திக் தலைமையில் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, மருதுபாண்டியர் நகர், வேந்தொனி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த 35 பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.


இன்று ஞாயிற்று கிழமை காலை பம்பையில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு வெளியே வரும் போது 5 பேர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றவர்கள் இதை கேட்டதால் அவர்களையும் அடித்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த மலையாள காவல் துறையும் தமிழக பக்தர்கள் மீது தாக்கி அவர்கள் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.   அதனால் அவர்களில் 20 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். 


அவர்களுடன் சென்ற மற்ற பக்தர்களின்  வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் மலையாள போலிஸ். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்ததால் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை நீர் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய 4 மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும்.

Dec 19, 2011

ஜெயலலிதா அதிரடி அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா,:நடராஜன் உள்பட 13 பேர் நீக்கம்-


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வசித்து வந்தார்.  சமீபகாலமாக சசிகலா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-