Feb 20, 2012

விடுதலை புலிகள் தடை வழக்கு : வைகோ மனுவை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு


விடுதலைப்புலிகளுக்கான தடையை நீக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்க மறுத்தது தவறானது என்றார். 
தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, விடுதலைப்புலிகளுக்கு  தடை விதித்தது சரியானது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த நிலையை தமிழக அரசும் எடுத்துள்ளது. வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 9க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

4 comments:

rajamelaiyur said...

தலைவர் பிரபாகரன் இருக்காரா இல்லையா ?

rajamelaiyur said...

இன்றைய பதிவில்

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.

arasan said...

பல வேடம் போடும் தமிழக அரசுக்கு பதில் கொடுக்கும் காலம் விரைவில் வரும் ..

த. முத்துகிருஷ்ணன் said...

தலைவர் இருக்கிறார். கண்டிப்பாக வருவார்.