Jul 15, 2013


          ம.தி.மு.க.வில் வைகோவுக்கு அடுத்தபடியாக தனது அதிரடி பேச்சுக்களால் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் நாஞ்சில் சம்பத். தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என விளையாட்டுக் காட்டிய இவர், கருப்புத் துண்டை மறந்துவிட்டு ஜெ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  அடுத்த நிமிடமே அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியை ஜெ. அறிவித்திருக்கிறார்.  அவரை சந்தித்தபோது...

தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சி களில் பணியாற்றிய நீங்கள் அ.தி.மு.க.வில் இணைந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

நாஞ்சில் சம்பத் : கழுகால் விரட்டப்பட்ட புறா சிபி சக்கரவர்த்தியின் மடியில் அடைக்கலம் நாடியது போல் அ.தி.மு.க.வில் அடைக்கலம் நாடியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி உணர்கிறேன். பள்ளத்தில் இருந்து சமவெளிக்கு வந்தது மாதிரி இருக்கிறது. மிகுந்த கனிவோடும் பரிவோடும் என்னிடம் உரையாடிய அம்மா, எனது குடும்பத்து நிலை குறித்து பரிவோடு விசாரித் தார்கள். என்மீது போ டப்பட்டிருந்த வழக்கு கள் திரும்பப் பெறப் படும் என சொல்லி என்மீது திணிக்கப் பட்ட விலங்குகள் நொறுங்கி விழுந்த பரவசத்திற்குள் ளாக்கினார்கள். இனி என் பயணம் அ.தி.மு.க.வின் வெற்றிகளையும் பெருமைகளையும் சொல் வதாக இருக்கும். பட்டபாடு களுக்கு உரிய பரிசுகளை இனி மேல்தான் பெறப்போகிறேன்.

2 comments:

இரா.கதிர்வேல் said...

அடி(மடி)யில் விழுந்து தஞ்சமடைந்தவர்க்கு இறுதி அடக்கம் மட்டுமே உண்டு!

த. முத்துகிருஷ்ணன் said...

பாவம், மதிமுகவில் கோயில்காளையாய் திரிந்தவர் அதிமுகவில் அடிமாடாய் திரிகிறார்.