Nov 23, 2017

தர்ம யுத்தமா..?


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பை எதிர்த்து கழகம் சார்பில் தொடர்ந்துள்ள வழக்கில் கழக வழக்கறிஞர் சாதுர்யமாக வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார். கருத்து வேறுபாடு என்பது கட்சித் தாவலாகக் கருத முடியாது. கட்சித் தாவல் சட்டத்திற்கும் அது உட்பட்டதல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, கட்சியை விட்டு விலகி னாலோ மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக் கையை சபாநாயகர் எடுக்க முடியும். ஆளுநரை நேரே சந்தித்து கடிதம் கொடுப்ப- த- £ல் மட்டுமே கட்சித் தாவல் சட்டத்தைத் தவ-றாகப் பயன்படுத்த முடியாது. சட்டத்தின் இயற்கை நீதிக்கு எதிராக சபாநாயகர் தகுதி இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என்று வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் வழக்கறிஞர் வாதம் செய்திருக்கிறார். இந்த பன்னீர், பாண்டியராஜன் உட்பட 12 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால் பன்னீர் எங்கு சென்று தர்ம யுத்தம் நடத்துவார்? என கூட இருக்கும் கொட்டைப் பாக்கு மண்டைகள்தான் பதில் சொல்ல வேண்டும்! ஆக, விரைவில் வெளிவர இருக்கும் தீர்ப்பானது உண்மையான நீதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கோமாளிகள் கூட்டுச் சேர்ந்து எடுத்த முடிவு எந்த அளவிற்கு கேவலமானது என்பதும் மக்களுக்குத் தெரிய வரும். சென்ற வருடம் இதே மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இந்த வருடம் இதே மாதத்தில் துணை முதலமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது நிதித் துறையை கையில் வைத்திருக்கும் பன்னீர், தனக்கு நிதியைப் பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் மீன்வளத்தை முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள அனுப்புகிறார்! ஆனால், மீனவளத்துக்கும் நிதியைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பது மீன்வளத்தின் நடவடிக்கையைப் பார்க்கும்போது தெரிகிறது. நிதி, நீதி & இரண்டிலும் சதி செய்து விதி விளையாடு-கிறது. இது ஒருபுறம் இருக்க, கோவையில் ஆய்வு நடத்திய ஆளுநர் துறைகள் பற்றிய ஆய்வு நடத்தவில்லை; பொழுது போகாதத- £ல் கலந்துரையாடல் நடத்தினார் என்று சப்பைக்கட்டு செய்து எடப்பாடியார் 
பேசி-யிருக்-கிறார். தலைமைச் செயலகத்திலேயே ஆளுநருக்கு தனி அறை என்பது இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்-படுவதுதான் ஆளுநர் என்று தற்போது ஆட்சி-யாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் இவற்றைப் 
பற்றி அறிக்கை ஒன்றை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தயாரித்து வருகிறது. அது விரைவில் ஆளுநர் வசம் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்கத்தான் ஆளுநர் வந்திருக்கிறார் என்று ஆளும் தரப்பிற்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. எப்படியோ, நல்லது நடந்தால் சரி! கடந்த ஓர் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை கீழே இறங்கி வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டி- ருக்கிறது என்பதை மறைத்து, இந்தியாவில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பதாக அண்டப் புளுகை பன்னீர் நந்தம்பாக்கம் தொழில் மாநாட்டில் கூறியிருக்கிறார். நிதியைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆளுநர் தற்போது ஒவ்வொரு துறை யாக ஆய்வு செய்து தன் பங்குக்கு ஒரு புதிய ‘தர்ம யுத்தம்’ ஒன்றை தொடங்கி யிருக்கி- றாரோ என்று மக்கள் நினைக்கத் தொடங்கி-யிருக்-கிறார்கள். ஏற்கெனவே ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் அதர்ம யுத்தத்தை நடத்திய துரோகிகள் தற்போது ஆளுநரின் தர்ம யுத்தத்தைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறார்கள் என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் பற்றிய குறைகளை மாவட்ட ரீதியாக மக்கள் ஒன்று சேர்ந்து ஆளுநரிடம் மனு கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தியும் ஆளும் தரப்பினரை பேதியடையச் செய்திருக்கிறது! ஆளுநரின் நடவடிக்கை ஆளும் தரப்பிற்கு உளவியல் ரீதியாக பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். 
 சோழா அமுதன்

Nov 22, 2017

பயமா எங்களுக்கா ? எந்தப் பயமும் இல்லை! - நடராசன் அதிரடி

‘‘வாங்க... வாங்க... வெளியில என்ன பேசிக்கிறாங்க?’’ என்று நம்மை வரவேற்ற நடராசனின் கைகளில் அன்றைய நாளிதழ்கள் இருந்தன. ‘‘முட்டை விலை ஏழு ரூபாயா ஆகிடுச்சே... உற்பத்தியில எந்தப் பிரச்னையும் இல்லையே! அப்புறம் ஏன் விலையைக் கூட்டியிருக்காங்க... ஜி.எஸ்.டியா?’’ என நம்மைக் கேள்விகேட்டார்.மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டுவந்திருக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். சசிகலாவின் குடும்பம் மொத்தத்தையும் ஐ.டி ரெய்டுகள் சூறாவளியாய்ச் சுழற்றியடிக்கும் சூழலில், உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையை முடித்துவிட்டு முழுமையான ஓய்வில் இருக்கும் நடராசனை, அவரின் தம்பி ராமச்சந்திரனின் இல்லத்தில் சந்தித்தோம். உடலில் தளர்வும் சோர்வும் தெரிந்தாலும், மனதளவில் உற்சாகமாக இருப்பது அவர் பேச்சில் தெரிகிறது. யாருக்கோ புரியவேண்டிய வகையில் அர்த்தம் பொதிந்துப் பேசுவது நடராசனின் வழக்கம். அது மாறவே இல்லை.


‘‘உடல்நிலை எப்படி இருக்கிறது?’’ 


‘‘நீங்களே சொல்லுங்க... நான் எப்படி இருக்கேன்? நல்லாத்தானே இருக்கேன். ஓய்வு உடம்புக்குத்தான். காலையில் அப்பார்ட்மென்ட்டுக்கு வெளியே வாக்கிங் போறேன். அப்புறம் செய்திகளைப் பாக்குறது, படிக்கிறது, ‘செக்கப்’புக்குப் போறதுன்னு நேரம் சரியா இருக்கு. வாக்கிங் போறப்ப நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. எல்லா ஃபிளாட்ல இருந்தும் ஆச்சர்யமா எட்டிப் பாத்தாங்க. மறுநாளே வந்து அறிமுகப்படுத்திக் கிட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய பெண்கள் வந்து, ‘எப்படி இருக்கீங்க’ன்னு விசாரிக்கிறாங்க. ஆட்டோகிராஃப்லாம்கூட கேட்குறாங்க. ஒரு பிரியத்துல அப்படிப் பேசுறாங்க.’’  ‘‘மருத்துவமனையில் உங்கள் மனைவி சசிகலா வந்து பார்த்தபோது, உங்களுக்குச் சுயநினைவு இருந்ததா, பேசினீர்களா?’’ ‘‘கணவன்-மனைவி பாத்துக்கிட்டா பேசாம இருப்பாங்களா? அந்த நேரத்துல ரெண்டு பேரும் சந்திச்சது ஒரு சந்தோஷம். அது ஆறுதலா, தெம்பா இருக்கும்ல! ‘என்ன பேசுனீங்க’ன்னுலாம் நீங்க கேட்கக்கூடாது. அது பர்சனல். கணவன்-மனைவிக்கு இடையில பேச ஆயிரம் இருக்கும்! ஆனா, உங்களுக்கு ஒரு போட்டோ காட்டுறேன் பாருங்க... (மொபைலில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த போட்டோவில், நடராசன் பெட்டுக்கு அருகில் சசிகலா உட்கார்ந்திருக்கிறார். லட்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட அழகழகான குழந்தைகள் சிரித்துக்கொண்டு நிற்க, அவர்களை அணைத்தபடி சசிகலா பூரிப்புடன் காணப்படுகிறார்.) எல்லாம் பேரப் பசங்க. இது பழனிவேல் பேத்தி, இது ராமச்சந்திரனோட பேரன்...’’‘‘உங்கள் குடும்பத்தைக் குறிவைத்து மிகப்பெரிய ரெய்டை வருமானவரித் துறை நடத்தியுள்ளதே?’’ ‘‘நடத்தட்டும்! ரெய்டு இன்னைக்கு மட்டுமா நடக்குது! முன்னாடி ப.சிதம்பரம் சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தப்பவும்தான் நடந்துச்சு. அதனால என்ன ஆகப்போகுது? எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்தப் பயமும் இல்லை. ரெய்டுல என்ன கிடைச்சது? தஞ்சாவூர்ல இருக்கிற என் வீட்டுக்கு அதிகாரிகள் போயிருக்காங்க. அங்க இருந்த பையன் பிரபு, ‘ரெய்டு பண்ண ஆர்டர் இருக்கா’ன்னு கேட்டதுக்கு, திவாகரன் பேருக்கு வந்த ஆர்டரை அந்த அதிகாரிகள் காமிச்சுருக்காங்க. பிரபு அதைப் பாத்துட்டு, ‘இது நடராசன் சாரோட வீடு’ன்னு சொல்லவும்... ‘அய்யோ! மாத்தி வந்துட்டோம்’ன்னு அந்த அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதன்பிறகு, ‘வந்ததுக்கு வேணும்னா சோதனை பண்ணிக்கோங்க’ன்னு சொல்லி அந்தப் பையனும் எல்லா அறைகளுக்கும் அழைச்சுட்டுப் போயிருக்கான். என்ன கிடைச்சுச்சு அங்க? ஒண்ணும் இல்ல. எங்க அம்மா வெத்தலைப் பெட்டியில இருந்த 180 ரூபாயைப் பிடிச்சு, அதை தினகரன் கணக்குல வரவு வெச்சுட்டுப் போயிருக்காங்க. வீட்டு மாடியில ஒரு ரூம்ல இருந்த அலமாரிக்குச் சாவி தொலைஞ்சு போச்சு போல! அதனால அதைத் திறக்க முடியாம, அதுக்கு மட்டும் சீல் வெச்சுட்டுப் போயிருக்காங்க.’’‘‘இந்தச் சோதனையை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று நினைக்கிறீர்களா?’’ ‘‘சென்ட்ரல் மினிஸ்டரா ப.சிதம்பரம் இருந்தப்போ, என்னோட ‘தமிழரசி’ பத்திரிகைல புகுந்து ரெய்டு பண்ணாங்க. அப்பவும் ஒண்ணும் கிடைக்கல. அது வேற பிரச்னை. அதை இப்ப நான் ஏன் சொல்றேன்னா, அதே சிதம்பரம் வீட்லயும் சமீபத்துல ரெய்டு நடந்துச்சு. அப்போ, ‘என்னைத் தாக்க என் குடும்பத்தை மோடி குறிவைக்கிறார்’னு சிதம்பரம் சொன்னார். சிதம்பரம் அப்படி சொன்னப்போ, நான் ஓர் அறிக்கை விட்டேன். அதுல, ‘உங்க வீட்ல நடந்தா பழிவாங்கும் நடவடிக்கை... நீங்க எங்க வீட்ல ரெய்டு நடத்துனா, அது நேர்மையான நடவடிக்கையா’ன்னு கேட்டிருந்தேன். நான் ஒருத்தன்தான் அவரை அப்படிக் கேள்வி கேட்டு அறிக்கைவிட்டேன். இதை நான் ஏன் இங்க சொல்றேன்னா... சிதம்பரம் என்ன சாதாரண ஆளா? சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தவர். அங்க உள்ள நடைமுறைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அப்படி இருந்தும், அவர் வீட்ல நடந்த ரெய்டை ‘பழிவாங்கல் நடவடிக்கை’ன்னு அவரே சொல்றார்னா... அதுக்கும் வாய்ப்பு இருக்குன்னுதானே அர்த்தம். நடக்கட்டும்... பாப்போம்!’’  ‘‘கவர்னர் இப்போது ஆய்வுக்குப் போகிறார். அது சர்ச்சை ஆகியுள்ளதே?’’ ‘‘அவங்களை நல்லவங்களா காட்டிக்க இந்த மாதிரி ஏதாவது பண்றாங்க; பண்ணட்டும். மக்கள் நம்பிருவாங்களா? எல்லாத்தையும் பார்த்துட்டுத்தானே இருக்காங்க. மகாபாரதத்துல துரியோதனன் கதை  வரும். துரியோதனன்கிட்ட, ‘சபையில இருக்கவங்கள்ல நல்லவங்க யார்’ன்னு கேப்பாங்க. துரியோதனன் கண்ணுக்கு அந்தச் சபையில இருக்க யாரும் நல்லவங்களா தெரியமாட்டாங்க. அதனால, ‘எல்லாரும் கெட்டவங்கதான்’னு துரியோதனன் சொல்லுவான். அதே வேலைய தர்மர்கிட்ட கொடுப்பாங்க. அவர் கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நாம பார்க்கும் விதத்துலதானே இருக்கு. நல்ல கண்களால பாத்தா... எல்லாம் நல்லதாத்தான் தெரியும். கெட்ட கண்ணால பார்த்தா... எல்லாம் கெட்டதாகத்தான் தெரியும்.’’ ‘‘கவர்னரின் ஆய்வு நடவடிக்கையை முதல்வரும் அமைச்சர்களும் வரவேற்கிறார்களே?’’ ‘‘அவங்க வேற என்ன செய்வாங்க? அதைத்தானே செய்ய முடியும். அவங்களுக்குச் சொந்தப் பிரச்னைகளும் இருக்கு; மாநிலப் பிரச்னைகளும் இருக்கு. எல்லாத்துலயும் இருந்து அவங்கள காப்பாத்திக்கணும்னா, அதைத்தானே செஞ்சாகணும். வேற என்ன அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்க முடியும்?’’ ‘‘நீங்கள் சிகிச்சை முடிந்துவந்த பிறகு, உங்களிடம் முதல்வர், துணை முதல்வர் தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா?’’ ‘‘யார்கிட்டயும் பேசணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல; பேசி என்ன ஆகப்போகுது? ஆனா, ‘எடப்பாடிக்கும், பன்னீருக்கும் பிரச்னை இருக்குண்ணே! இப்போ கூப்பிட்டா பன்னீர் நம்ம பக்கம் ஓடிவந்துடுவார்’ன்னு பசங்க சொன்னாங்க. ‘நாம பண்ற வேலையாடா இது? அவராத்தான போனார்; அவரைப்போய் நாம ஏன் கூப்பிடணும்’னு சொல்லிட்டேன். அவ்வளவுதான்.’’‘‘தினகரன் நிதானமாக எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார். அதில் உங்களுக்குத் திருப்தியா?’’
(சிறிது யோசனைக்குப் பிறகு) ‘‘இப்போ அதைப் பண்ணித்தானே ஆகணும். ஆனா, ஒண்ணு புரிஞ்சுக்கணும். எல்லாருக்கும் ஒரு சுயமரியாதை உணர்வு, தனி மனித உரிமை எல்லாம் இருக்கு. அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கணும். அப்படி இருந்தா, யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது; வந்திருக்கவும் செய்யாது!’’


‘‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால்... தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் தெரிகிறதே?’’ 


‘‘ஒற்றுமையா... வேற்றுமையில் ஒற்றுமையா... ஒற்றுமையில் வேற்றுமையா... எப்படிச் சொல்றீங்க? (நம்மைக் கூர்மையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்). மூணு பேர் மட்டும் என்ன... எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னுதான் சொல்றேன். சின்னச் சின்ன வேற்றுமை, மனஸ்தாபம் இருந்தாலும் அதையும் ஒற்றுமையா இருந்துதான் எதிர்கொள்ளணும். அப்படி இருந்தா, அவங்களுக்கும் நல்லது; கட்சிக்கும் நல்லது; எல்லாருக்கும் நல்லது.’’ ‘‘வருமானவரித்   துறை  சோதனையால், குடும்பத்தினர் சோர்ந்துபோயுள்ளார்களா?’’ ‘‘யாரும் சோர்ந்து போகவில்லை! ஒவ்வொருத்தரும் ஓர் எல்லையை நிர்ணயிச்சுக்கணும். நமக்கு எது தேவையோ, அதை எல்லையா வெச்சுக்கணும். நிம்மதியா தூங்குறதுக்கு ஒரு பாய், தலையணை இருந்தா போதும். அதை ரோட்ல, ரயில்வே ஸ்டேஷன்லன்னு எங்க வேணும்னாலும் விரிச்சுப் படுத்துடலாம்ல. நான் அப்படிப் படுத்துருவேன். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா? வசதி வந்தா, பெட், மெத்தைன்னு ‘கம்ஃபர்ட் லெவல்’ கூடும். அது வேற! ஆனா, ‘நமக்கு என்ன தேவை... எவ்வளவு தேவை’ன்னு அளவைச் சரியா நிர்ணயிச்சுக்கிட்டு வாழ்ந்தா, இந்த ரெய்டுலாம் நம்ம பக்கத்துல கூட வர முடியாது. இப்போ என் பக்கத்துலயே வர முடியலையே! அதைப் புரிஞ்சுக்கணும்.’’ ‘‘இரட்டை இலைச் சின்ன வழக்கு...’’ ‘‘1989-ல அந்தச் சின்னத்தை மீட்டுக்கொடுத்தது யாரு? இந்த நடராசன்தான். டெல்லியில அப்போ பல அ.தி.மு.க தலைவர்களும் இருந்தாங்க. வேறு ஒரு வேலைய முடிச்சுட்டுக் கிளம்புற அவசரத்துல இருந்த அந்தத் தலைவர்கள்கிட்ட, ‘எல்லாரும் வெயிட் பண்ணுங்க. இன்னொரு சஸ்பென்ஸ் செய்தி இருக்கு’ன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல இரட்டை இலை திரும்பக் கிடைச்ச செய்தி வந்தது. அப்போ ராகவானந்தம் இருந்தார். ‘இந்த லெட்டரை நானே போய் ஜெயலலிதா மேடம்கிட்ட கொடுக்கிறேன்’னு ஆர்வமா சொன்னார். நான்தான் அவர் கையில அதைக் கொடுத்து அனுப்புனேன். இப்போ திரும்பவும் அந்தச் சின்னத்துக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கு. அது யாரால வந்துச்சு? எல்லாம், இங்க இருந்தவங்க செஞ்ச வேலைகளாலதானே. எங்க சுத்துனாலும் இங்கதான வரணும்; வரட்டும். அது பெரிய பிரச்னை இல்லை!’’- ஜோ.ஸ்டாலின், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
நன்றி ஜூவி

Nov 18, 2017

மாப்பு வச்சுட்டாங்க ஆப்பு

 புறப்பட்டார் புரோஹித்... டிசம்பரில்
கவர்னர் ஆட்சி!

‘‘மிழகத்தில் மறைமுகமாக பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது என இனி யாரும் சொல்ல முடியாதுஎன்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘
ஏன், தமிழகத்தைக் கைகழுவ பி.ஜே.பி முடிவு செய்துவிட்டதா?’’ என்றோம். சிரித்தபடி ‘‘இல்லை’’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘நேரடியாகவே பி.ஜே.பி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கம்தான் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் கோவை விசிட்’’ என்றபடி தொடங்கினார்.

‘‘
புதுச்சேரியில் ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி; அல்லது அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமிக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது தமிழகத்திலும் அந்த நிலைதான் ஏற்படப்போகிறது. அதற்கான தொடக்கமாக துடைப்பத்தைக் கையில் எடுத்துவிட்டார் கவர்னர். குப்பைகளைக் கூட்டி அள்ளுவது போல அள்ளப்போகிறார். தமிழகத்தில் இதுவரை எந்த கவர்னரும் இப்படி ஆய்வு மேற்கொண்டதில்லை. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது தமிழகத்துக்கு கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் வெளிப்படையாகவே மோதல் நடந்தது. அந்தச் சூழ்நிலையில்கூட சென்னா ரெட்டி, இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டதில்லை. இப்போதைய கவர்னர் பன்வாரிலாலுக்கும் முதலமைச்சர் எடப்பாடிக்கும் என்ன மோதலா நடக்கிறது? ஆனால், கவர்னர் இப்படிச் செய்வது அரசியல் சட்டமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தொடங்கிவிட்டன.’’

‘     ‘
தினகரனும் பொங்கியுள்ளாரே?’’

‘‘
பொதுவாக கவர்னர், கிண்டி ராஜ் பவன் மாளிகையைவிட்டு வெளியில் வருவதில்லை. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள், குடியரசு தின விழா கொடியேற்றம், சட்டமன்ற உரை நிகழ்த்துவது போன்ற நிகழ்வுகளுக்கு மட்டும்தான் வெளியில் வருவார். மற்ற மாநிலங்களில் எப்படி நிலையோ... அதுதான் தமிழகத்திலும்.  ஆனால், புரோஹித்தை வைத்து அந்த மரபை உடைத்துள்ளது பி.ஜே.பி. புறப்பட்டு விட்டார் புரோஹித். இனி அவரை யாரும் தடுக்க முடியாதுஎன்பதே கோட்டை வட்டாரத் தகவல். அடுத்து கன்னியாகுமரியில் ஆய்வு செய்ய உள்ளார் கவர்னர். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் அவரைப் பார்க்கலாம். கோவையும், கன்னியாகுமரியும் பி.ஜே.பி-க்குக் கொஞ்சம் செல்வாக்கான இடங்கள். அங்கிருந்து கவர்னரின் ஆட்சி ஆரம்பமாயிருக்கிறது.

‘‘
என்னதான் பி.ஜே.பி-யின் திட்டம்?’’

‘‘
துடைப்பத்தை கவர்னர் ஏன் கையில் எடுத்தார் என்பது டிசம்பர் கடைசியில் தெரிந்துவிடும். டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 18-ம் தேதி வெளியாகும். அதன்பிறகு, தமிழகத்தில் சட்டமன்றம் முடக்கப்படும். கவர்னரின் கைக்கு ஆட்சி அதிகாரம் வந்துவிடும். கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்க உள்ளது.’’
‘‘ஆட்சியை முடக்க முடிவெடுத்தால் தாமதம் செய்ய மாட்டார்களே?’’

‘‘
இப்போது பிரதமர் மோடி, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் கவனம் முழுவதும் குஜராத்தில்தான் இருக்கிறது. மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்கப்படுகின்றன. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிக்கும் வேகத்தைப் பார்த்தால், சீக்கிரம் ஒரு முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. கவர்னர் அதைப் பயன்படுத்திக்கொண்டால், ஆட்சியைக் கவிழ்த்த கெட்ட பெயர் பி.ஜே.பி-க்கு வராது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.’’

‘‘
கோவையில் கவர்னர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணியை அனுமதிக்கவில்லை என்கிறார்களே?’’

‘‘14-
ம் தேதி காலை கவர்னர் கோவை வந்திறங்கினார். அன்று காலையே, ஆஸ்திரேலியாவிலிருந்து அமைச்சர் வேலுமணியும் கோவை வந்துவிட்டார். முதலில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார். அதன்பிறகு, ரேஸ்கோர்ஸ் சுற்றுலா மாளிகையில், திட்டமிட்டப்படி மாலை 3.30 மணிக்கு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கோவை கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தால், அதிகாரிகளின் கூட்டத்துக்கு அமைச்சர் வேலுமணி அனுமதிக்கப்படவில்லைஎனச் சொல்கிறார்கள். திட்டமிட்டுத் தான் அமைச்சரை அனுமதிக்க வில்லை. அமைச்சர் இருந்தால் அதிகாரிகள் சுதந்திரமாகப் பேசமாட்டார்கள்என கவர்னர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.’’

‘‘
அப்படியா?’’

‘‘
ஆமாம். இல்லையென்றால் அங்கும் செட்டப் ஆலோசனைதான் நடந்திருக்கும். 15-ம் தேதி காலை 7 மணிக்கே காந்திபுரத்தில் தூய்மை இந்தியாதிட்டப் பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதற்காக காந்திபுரம் முழுவதும் பளிச் தூய்மையில் இருந்தது. அவர் துடைப்பத்துடன் குப்பை அள்ளுவதற்காக மட்டும் சில இடங்களில் சம்பிரதாயத்துக்காகக் குப்பை கொட்டி வைக்கப்பட்டது. திட்டமிட்டபடியே அவற்றைச் சுத்தம் செய்தார் கவர்னர். அவரது வருகைக்காக வைக்கப் பட்ட குப்பைத்தொட்டிகள், அவர் சென்ற சில நிமிடங்களிலேயே மாயமாகின.’’

‘‘
செட்டப் குப்பை... செட்டப் குப்பைத் தொட்டியா?”

‘‘
அரசாங்கமே செட்டப் அரசாங்கம் போலத்தானே இருக்கிறது. கவர்னர் தினமும் தலைமைச் செயலகத்துக்கு வரப்போகிறார் என்ற தகவலும் பரவிக் கிடக்கிறது. தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் கவர்னருக்கு அறை உள்ளது. முதல் தளத்தில் உள்ள அறைக்கு கடந்த பத்தாண்டுகளில் எந்த கவர்னரும் சென்றதில்லை. ஆனால், இப்போது அந்த அறை வேகமாகத் தயார் செய்யப்படுகின்றன. தினமும் கவர்னர் அந்த அறையில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகிறாராம்.’’

‘‘
அப்போது முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரலாமா, கூடாதா?’’

‘‘
இதற்கு எடப்பாடியிடம் பதில் இருக்காது. ஆனால், அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. பிரிவு 167-ன் படி, முதல்வர்தான் கவர்னருக்குத் தகவல்களைச் சொல்ல வேண்டும். கவர்னர் நேரடியாக அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளத் தேவையில்லை. அசாதாரண சூழ்நிலைகளில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டியிருந்தால், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி போன்றவர்களைக் கூப்பிட்டுத் தகவல் கேட்கலாம். மற்றபடி கவர்னர், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும், முதல்வர் தரும் தகவல்களையுமே கவனிக்க வேண்டும். ஆனால், பன்வாரிலால் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவே இந்த ஆய்வுகள்என்கிறார். எதற்காக அவர் அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,இப்படிப் பழகிக்கொண்டு எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப்போகிறார்என்பதுதான் டிசம்பர் மர்மத்தில் உள்ளது.’’

‘‘
இதற்கு டெல்லி எந்த வகையில் உதவுகிறது?’’

‘‘
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுப்பணிக்குப் போன ராஜகோபால் ஐ.ஏ.எஸ், தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார். அவர்தான் கவர்னரின் செயலாளராக ஆகப் போகிறார் என்பது தகவல். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க சமீபத்தில் மோடி சென்னை வந்தார். அந்த சோமநாதனும் இப்போது தமிழ்நாட்டுப் பணிக்கு வருகிறார். கவர்னரின் ஆட்சிக்கு உதவ இப்படி இன்னும் பலர் வருவார்கள் எனக் கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள்’’ என்ற கழுகார் ஜன்னல் வழியே பாய்ந்தார். அவர் வைத்துவிட்டுப் போன குறிப்புகள், காற்றில் படபடத்தன
நன்றி ஜூனியர் விகடன் .


Nov 17, 2017

பிணமலரா? புரளிமலரா?

பிணமலர் ரொம்பவே பொங்கி பொங்கி வழியுது! யோக்கிய சிகாமணி போல பத்திரிகைகளில் வதந்திகளைப் போட்டு பெரிதுபடுத்தி தனது பிழைப்பை நடத்தி வரும் இந்த மஞ்சள் பத்திரிகை தேசிய நாளேடு என்ற பெயரில் துவேச நாளேடாக வந்து-கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அதன் உரிமையாளரின் மகன் ஒருவர் தன் அலுவலகத்தில் பெண்--ணிடம் வாலாட்டி போலீசில் அடிவாங்கிய செய்தி அனைவருக்கும் தெரியும். பல இடங்களில் பிளாக்-மெயில் செய்து ரியல் எஸ்டேட் செய்பவர்களிடமிருந்து பணத்தைக் கறந்து தனது பிழைப்பை பிணமலர் நடத்தி வருகிறது. ‘நமது சிறப்பு நிருபர்’ என்ற பெயரில் செருப்பு நிருபர் ஒருவரை வைத்து செய்தி-களை இட்டுக்கட்டி உண்மைக்குப் புறம்-பாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. தனது அந்த செருப்பு நிருபர் நேரில் இருந்து பார்த்ததுபோல் “கரன்சி நோட்டுகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றினார்கள்” என்ற பொய்ச் செய்தியை பிணமலரில் வெளி-யிட்-டிருக்கிறது. 2005&2006&ல் மதுரை புறநகர்ப் பகுதியில் கல்லூரி கட்ட புறம்போக்கு நிலத்தை பிணமலர் நிர்வாகத்தினர் வளைத்தார்கள். பொதுமக்களின் புகாரின்பேரில் புரட்சித்-தலைவி அம்மா அவர்களின் அரசு நட-வடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி-யது. அம்மா அவர்களிடம் அனுமதி வாங்குவதற்காக சின்னம்மா அவர்களிடம் கெஞ்சி அந்த இடத்தை ஒதுக்கித் தரும்-படி கேட்-டார்கள். சின்னம்மா அவர்கள் மறுத்து-விட்டார்கள். ஏமாற்றத்தில் விரக்தியடைந்த புறம்போக்கு பிணமலர் அன்றிலிருந்து இன்று-வரை பொய்ச் சங்கு ஊதி ஊதி செய்திகளைப் போட்டு வருகிறார்கள்.
புரளிகளில் எத்தனை வகை உண்டோ, எத்தனை நிறம் உண்டோ அத்துணை வகைகளையும் தன்னகத்தே கொண்டு தமிழ்நாட்டில் இப்படியரு புரளி நாளேட்டை யாராலும் நடத்த முடியாது என்று சவால்-விட்டு தினமலர் தனது தில்லாலங்கடி வேலையை செய்து 
வருகிறது. பத்திரிகை துறையின் களங்கமாக விளங்கி வரும் பிணமலர் தினம் தினம் வெளிவந்து தினக்கழிவுகளாக மாறி வருவதாக தமிழக மக்களும் மற்றும் ஊடகங்-களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மரநாய்களால் மகாமந்திரம் எழுத முடியாது! கழுதைப் புலிகளால் வீர காவியம் படைக்க முடியாது! ஓநாய்களிடம் ஒழுக்கத்தைக் காண முடியாது! காட்டுப் பன்றிகளிடம் கண்ணி-யத்தைக் காண முடியாது. அதுபோல தினமலரிடம் உண்மையை, நேர்மையை தேடினாலும் கிடைக்காது! விரைவில் திரை விலகும்! பொய் மூட்டைகள் உடைக்கப்படும்! பிணமலரின் வாசம் தேடி ஈக்கள்கூட நெருங்காது!  
சோழா அமுதன்

Nov 15, 2017

தில் தினகரன் பேட்டி ஜூனியர் விகடனில்

ங்களின் உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, ஒன்றும் இல்லாதவர்களைப் பிடித்து ரெய்டு நடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ எனச் சிரித்தபடியே சீறுகிறார் டி.டி.வி.தினகரன். மொத்தக் குடும்பமும் ரெய்டில் சிக்கிய நிலையில், தைரியமாக வெளியில் வந்து பேசிய தினகரன், ‘தில்கரனாக தன்னை நிரூபித்தார். தினகரனை மட்டும் விட்டுவிட்டு, அவரைச் சுற்றிலும் இருப்பவர்களைச் சீண்டியது ரெய்டு வியூகம். தினகரனைப் பயமுறுத்தும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறார்கள். 1,850 அதிகாரிகள் 187 இடங்களில் ரெய்டு நடத்திக்கொண்டிருந்தபோது, கோ பூஜையில் ஈடுபட்டிருந்தார் தினகரன். ரெய்டு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூலாக கோயில்களுக்குச் சென்று திரும்பிய தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்தோம். புன்னகையுடன் இயல்பாகப் பேசினார்....

‘‘இந்த ரெய்டை எதிர்பார்த்தீர்களா?’’ 

‘‘
வஞ்சம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்தளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல இது; அவர்களது வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. எங்கள் குடும்பத்தை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணம். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், எங்கள் சொந்தங்களின் வீடுகளுக்கு வந்திருக்கக் கூடாது. உண்மையிலேயே எங்களின் பவர்ஃபுல் பினாமிகள் யார் தெரியுமா? எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். அவர்களின் வீடுகளில்தான் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும். கடந்த ஆட்சியிலும், இப்போதைய ஆட்சியிலும் அவர்கள்தானே பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள். இவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 31 அமைச்சர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். எங்களால்தான் இவர்கள் பதவியில் அமர்ந்தார்கள். அரசாங்கத்தில் நாங்கள் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், இவர்கள்தானே செய்திருக்க வேண்டும்? அப்படியானால், இவர்கள்தானே எங்களின் பினாமிகளாக இருக்க முடியும்? இந்த உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, மற்றவர்களை ரெய்டு செய்வதில் என்ன நியாயம் உள்ளது?’’
‘‘பி.ஜே.பி தலைமைக்கும் சசிகலா குடும்பத்துக்குமான மோதல்தான், இந்த ரெய்டுக்கும் காரணம் என்று நினைக்கிறீர்களா?’’


‘‘தெரியவில்லை. ஆனால், குருமூர்த்தி ஆரம்பத்திலிருந்து எங்களுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறார். அவரைக்கூட ஒருமுறை சந்தித்தேன். அவர் நினைப்பதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்-காரராக இருக்கலாம். பி.ஜே.பி-க்கு வேண்டியவராக இருக்கலாம். அதற்காக அவர் நினைப்பதை எப்படித் தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள்? அவரது விருப்பத்துக்கு நாங்கள் எப்படிச் செயல்பட முடியும்?


கடந்த ஓராண்டுக் காலமாக கவர்னரைத் தங்கள் விருப்பத்துக்குத் தகுந்தமாதிரி பி.ஜே.பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிவருகிறார். 12 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருந்த பன்னீர்செல்வத்துக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கத் துடித்ததும், இன்று 117 எம்.எல்.ஏ-க்கள் பலம் இல்லாத எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் தொடர வைப்பதற்கும் காரணம் பி.ஜே.பி-தான். ஆரம்பத்தில் எங்கள் பக்கம் இருந்த எம்.எல்.ஏ-க்களைப் பன்னீர் பக்கம் வரவழைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை.


இது எங்கள் கட்சிப் பிரச்னை. இதில் குருமூர்த்தி ஏன் தலையிட வேண்டும்? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தமிழகத்திலும் ஆட்சியை அமைத்துவிட முடியுமா? அதிகாரத்தில் இருப்பதால், வருமானவரித் துறை மாதிரியான துறைகளை ஏவிவிட்டு எங்களை மாதிரி ஆட்களை மிரட்டலாம்; ரெய்டு நடத்தலாம்; கைது செய்யலாம். ஆனால், குருமூர்த்தியின் நோக்கம் தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது. எடப்பாடியும் பன்னீரும் வேண்டுமானால் அவரைப் பார்த்து நடுங்கலாம். எனக்கென்ன பயம்? சில அமைச்சர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதாகத் தகவல் வருகிறது. ஏதோ திட்டம் போடுகிறார்கள். இது தெரிந்தோ  தெரியாமலோ, மத்திய அரசும் துணைபோகிறது. தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு கெட்ட பெயரை வாங்கிக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். இப்போது உணர மாட்டார்கள். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும்போது உணர்வார்கள்.’’


‘‘அரசியல்ரீதியான உள்நோக்கம்தான் இந்த ரெய்டுகளுக்குக் காரணம் என்கிறீர்களா?’’


‘‘எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில்தான், 95 சதவிகிதத் தொண்டர்கள் இருக்கிறார்கள்; மக்களும் இருக்கிறார்கள். எங்களுடன் 18  எம்.எல்.ஏ-க்கள் இப்போது இருக்கிறார்கள். எடப்பாடி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் விரைவில் எங்கள் பக்கம் வரத் தயாராகி விட்டனர். இதைத் தெரிந்துகொண்டு எடப்பாடியும் பன்னீரும் இந்த ரெய்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இரண்டு மூன்று வாரங்களாகவே இதை நடத்தத் திட்டமிட்டதாகச் சொல்கிறார்கள். கறுப்புப் பண ஒழிப்பு என்பதைத் தாண்டி ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்குமுன்பு, செந்தில்பாலாஜியைக் குறிவைத்து ரெய்டுகள் நடந்தன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை. என்ன, தூக்கிலா போட்டுவிடுவார்கள்? இவை எடப்பாடியையும் பன்னீரையும் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி செய்யும் வேலைகள்.’’


‘‘நீங்கள் பி.ஜே.பி-யைத் தாக்கிப் பேசுவதில்லை. ஆனால், சமீபத்தில் நமது எம்.ஜி.ஆர்நாளிதழில், பி.ஜே.பி-யை விமர்சித்ததுதான் ரெய்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறதே...?’’


‘‘ஆரம்பக் காலத்தில், அம்மா சொல்லி நமது எம்.ஜி.ஆர்பத்திரிகையை ஆரம்பித்தது நான்தான். ஆனால், இப்போது அந்த அலுவலகம் எங்கே இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களுக்கு நான் ஏதும் வழிகாட்டுவதில்லை. அதில் என்ன எழுதுகிறார்கள் என்றுகூட நான் பார்ப்பதில்லை. இதுவரை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாததால், நான் பி.ஜே.பி-யை நேரடியாகத் தாக்கிப் பேசவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் அரசியல் பிரமுகருமான அம்பிகாபதி, ஃபாஸ்ட் ட்ராக் என்கிற கால் டாக்சி நிறுவனத்தின் உரிமையாளர். பன்னீர்செல்வத்துடன் எப்போதும் இருக்கும் அம்பிகாபதிக்குச் சொந்தமான நிறுவனத்தின் 350 கார்களை ரெய்டுக்குப் பயன்படுத்தியுள்ளார்கள். ரெய்டுக்கு முன்பு, அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரி அருகே ஒரு ஹோட்டலில் சிலர் அமர்ந்து திட்டம் போட்டதாகவும் கேள்விப்படுகிறேன். எத்தனையோ டிராவல்ஸ்கள் இருக்கும்போது, ஒரே நிறுவனத்தின் 350 கார்களை வருமானவரித் துறை ஏன் வாடகைக்கு அமர்த்த வேண்டும்? இதைவைத்து நான் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறேன். பி.ஜே.பி-யின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த ரெய்டுகள்.’’


‘‘அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவைக் கைப்பற்றத்தான் ரெய்டு எனப் பேசிவருகிறார்களே?’’


‘‘அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மருத்துவமனைப் படுக்கையில் நைட்டி உடையில் படுத்தபடி அம்மா டி.வி பார்க்கிறார்; ஜூஸ் குடிக்கிறார். இந்தமாதிரி ஒரு வீடியோவைச் சின்னம்மா எடுத்திருக்கிறார். எங்கே தேவையோ, அங்கே சில நிபந்தனைகளுடன் அதை ஒப்படைப்பேன். இதெல்லாம் ரெய்டுக்குக் காரணமில்லை. எங்களை ஒழிக்க ஏதாவது கிடைக்காதா என்ற நோக்கத்துடனே இந்த ரெய்டு நடந்தது.’’
‘‘ரெய்டின்போது என்ன நடந்தது?’’


‘‘எனது புதுச்சேரி பண்ணை வீட்டில் பாதாள அறை இருந்ததாக வதந்தி பரவியது. அந்த வீட்டில் பேஸ்மென்ட்கூடக் கிடையாது. ரெய்டுக்கு வந்தவர்கள் காலையில் சீக்கிரமாகவே முடித்துவிட்டார்கள். ஆனால், உடனே வெளியே போகாமல் இரவு 7 மணி வரை உள்ளே இருந்தார்களாம். கடைசியாக வந்த ஓர்அதிகாரி, ‘ஏதுமில்லைஎன்று சொல்லமுடியாமல், பழைய பொருள்கள் இருந்த ஓர்அறையை சீல் வைத்துவிட்டு வேறு ஒரு டீம் வந்து மதிப்பீடு செய்யும்என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ரெய்டு முடிந்த பிறகு திவாகரனிடம் பேசினேன். கல்லூரி அட்மிஷன் ஃபீஸ் விஷயமாக ஏதோ விசாரித்ததாகச் சொன்னார். டாக்டர் சிவக்குமார் ஏதும் பிரச்னை இல்லைஎன்றார். வெங்கடேஷ், இரண்டு நாள் ஊரில் இல்லை. அதனால் காலதாமதம் ஆனது. அங்கும் ஏதும் பிரச்னை இல்லை. என் பிரதர் பாஸ்கரன், வீட்டிலிருந்து ஏழு கிலோ தங்கத்தை அதிகாரிகள் எடுத்துப்போனதாகச் சொன்னார். வீட்டில் பழைய நகைகள்தான் இருந்தன. ஆடிட்டர் மூலம் கணக்குக் காட்டி வாங்கிக்கொள்வேன்என்று சொன்னார். விவேக், கார்த்திகேயன், ராஜராஜனை என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. என்னைக் குறிவைப்பதற்காக மற்றவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது சரியா? என் உறவினர்கள் பல்வேறு தொழில்களில் இருப்பவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வரி கட்டுகிறவர்கள். வருமானவரித் துறை ஏதாவது கேட்டால், அவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.’’


‘‘எடப்பாடி அரசை வீழ்த்த தி.மு.க-வுடன் நீங்கள் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’


‘‘அம்மாவின் மரணத்துக்குச் சின்னம்மாதான் காரணம் என எப்படிக் கொளுத்திப் போட்டார்களோ... அதுபோன்ற வதந்திகளில் இதுவும் ஒன்று. ரெய்டு நடந்தபோது கலைஞர் டி.வி., சன் டி.வி பார்த்திருந்தாலே புரிந்திருக்குமே? அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற கொள்கையுடன் தி.மு.க செயல்படுகிறது. ஏற்கெனவே பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கத்தானே பார்த்தது தி.மு.க. இப்போது, ‘எடப்பாடி அரசு சரியில்லை. துரோக ஆட்சி. நீடித்தால் கட்சியே அழிந்துபோய்விடும்என்பதால் நாங்கள் கவர்னரிடம் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்தோம். இப்போது எங்களுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க நினைக்கிறது. எங்களின் நோக்கமும் தி.மு.க-வின் நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. மற்றபடி, மு.க.ஸ்டாலினை நான் நேரில் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன. தி.மு.க-வுடன் நாங்கள் சேர்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. அதேபோல, எங்களுடன் ரகசியக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கும் இல்லை.’’


‘‘பெங்களூரு சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்?’’ 


‘‘நவம்பர் 8-ம் தேதிகூட சின்னம்மாவைச் சிறையில் பார்த்தேன். வெளியில் நடப்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார். டி.வி பார்க்கிறார். பத்திரிகைகளைப் படிக்கிறார். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கவனிக்கிறார். அவர் சிறைக்குப் போன ஒரே மாதத்தில், இங்கே உள்ளவர்கள் எப்படி மாறிவிட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் கடிந்து பேசும் அளவுக்கு நான் நடந்துகொண்டதே இல்லை. அவர் ரொம்பவும் சாஃப்ட் டைப். என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதை நான் சரியாகச் செய்துவருகிறேன் என்றுதான் அவர் நம்புகிறார். இதுதான் நிஜம்.’’


‘‘சசிகலா பரோலில் வந்து இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது நிறைய சொத்துகள் பெயர் மாற்றம் நடந்ததாகவும், வக்கீல்கள் வந்துபோனதாகவும், அதனால்தான் சில வக்கீல்கள் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் வருமானவரித் துறை தரப்பில் சொல்லப்படுகிறதே?’’


‘‘நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், சின்னம்மா சார்பாக வழக்குகளில் ஆஜராகிறவர். இரட்டை இலைச் சின்னம் பெறுவது தொடர்பான வழக்கையும் கவனிக்கிறார். அதுதொடர்பாக அவர் வந்துவிட்டுப் போயிருக்கலாம். வேறு யார் வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.’’ 


‘‘இந்த ரெய்டுகளுக்கு அரசியல் நோக்கம் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உங்கள் குடும்பத்தினரை ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் அடுத்தடுத்து சுற்றி வருகின்றனவே?’’
‘‘எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு, அம்மாவுக்குப் பக்கபலமாக இருந்து கட்சியைக் காப்பாற்றியது எங்கள் குடும்பம்தான். அம்மாவுக்குக் காவல் அரணாக இருக்கிறோம் என்பதால்தான் இந்தப் புகார்கள், கைதுகள், சிறைச்சாலை சித்ரவதைகள் அனைத்தையும் அனுபவிக்கிறோம். நாங்கள் மிராசுதார் குடும்பம். எங்களுக்கும் பாரம்பர்யம் உண்டு. அரசியலில் நாங்கள் ஈடுபட ஆரம்பித்தபிறகுதான், இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் கிளப்பப்படுகின்றன. பழிவாங்குவதற்காகப் போடப்படும் வழக்குகள் இவை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். வழக்குகள் யார்மீது இல்லை... அன்புமணிமீது இல்லையா... மாறன் சகோதரர்கள்மீது இல்லையா... வழக்கு இல்லாத அரசியல் தலைவர் உண்டா? வழக்குகளை வைத்து ஓர் அரசியல்வாதியின் செயல்பாட்டை எடை போட முடியாது.’’
‘‘இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள். ஆனால், எடப்பாடியாலும் பன்னீராலும் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறீர்களா?”


‘‘நம்பித்தான் இவர்களை அம்மாவிடம் அறிமுகம் செய்தோம். முக்கியப் பதவிகளை அம்மா தந்தார்கள். அம்மாவுக்குப் பிறகு சின்னம்மாவும் மதிப்பு கொடுத்தார். இப்போது நன்றி மறந்துவிட்டார்கள். பன்னீர்செல்வத்தை முன்பு மூன்று முறை முதலமைச்சராக்கியதும், சிறைக்குச் செல்வதற்குமுன்பு எடப்பாடியை முதலமைச்சராக்கியதும் சின்னம்மாதான். சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள். பன்னீரை நீக்கிவிட்டு நீங்கள் முதலமைச்சர் ஆகுங்கள்என்று சொன்னவரே எடப்பாடிதான். ஆனால், அவரை முதல்வராக சின்னம்மா தேர்வு செய்தார். அவர்கள் இப்போது நடந்துகொள்வதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.’’
‘‘நீங்கள் அவர்கள் பக்கம் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று தம்பிதுரை சொல்லியிருக்கிறாரே?’’ 


‘‘அவர்கள்தான் எங்கள் பக்கம் வரவேண்டும்.” 


- கனிஷ்கா
அட்டை மற்றும் படங்கள்: கே.ராஜசேகரன்

நன்றி ஜூனியர் விகடன்